புதன், மார்ச் 17, 2010

அப்துல்லாஹ்வும், மாயாவதியும்

என்னுடைய மாமா ஒருவர் தீவிர கடவுள் மறுப்புக்கொள்கை உடையவராக இருந்தார். பெரியாரின் பேச்சில் (அ) கருத்தில் கவரப்பட்டு பகுத்தறிவுவாதியாக மாறினார். பெரியார் அறிவித்த ‘குடுமி அறுப்புப் போராட்டத்தில்’ கலந்துகொண்டு, சில பார்ப்பனர்களின் குடுமிகளை அறுத்து, அதற்காக போலீஸாரால் தேடப்பட்டிமிருக்கிறார். அப்போது, அவர் செந்தாரப்பட்டியில் இருக்கும் எங்கள் வீட்டில் தான் ஒளிந்திருந்ததாக என் தாத்தா கூறுவதுண்டு.  அச்சமயத்தில் நான் பிறந்திருக்கவேயில்லை. பிறகு என்ன ஆனதோ, திடீரென்று ஒரு நாள் தீவிர ஆன்மீகவாதியாக மாறினார். தினமும் குளித்து, முருகனை வழிபட்டு, திருநீறு பூசி, குடும்பத்தார்க்கும் தன் கையாலே திருநீறு பூசிய பிறகே அன்றைய தினத்தைத் தொடங்குவார்.

இதுபற்றி என் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது: “உங்க மாமன் போலீஸுக்கு பயந்து நம்ம வீட்ல வந்து ஒளிஞ்சிக்கிட்டிருந்தான். சாமி இல்லவே இல்லைன்னு என்கிட்ட வாதம் செஞ்சான். நான் மாரியப்பன் பூசாரி கிட்ட ஒரு நாள் அவனை கூட்டிக்கிட்டு போனேன். பூசாரி கிட்டயும் உங்க மாமன் இதே மாதிரி கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தான். மாரியப்பன், உங்க மாமனை அங்கே சுவரில் மாட்டியிருந்த ஒரு முருகன் படத்தை உற்றுப்பார்க்கச் சொன்னான். உங்க மாமன் கூட சேர்ந்து நானும் அந்தப்படத்தை உற்றுப்பாத்தேன். சற்று நேரத்தில்  புகைப்படத்திலிருந்த முருகன் சிரிக்க, உன் மாமன் பயந்துபோய்விட்டான். கூடவே, முருகன் பின்னாலிருந்த மயிலும் தன் தோகையை ஆட்டியது. அதற்குப் பின் தான் உன் மாமன் கடவுளை நம்ப ஆரம்பிச்சான்.”

என்னால் சத்தியமாக இதை நம்ப முடியவில்லை.மாமாவிடமே கேட்டேன். அவர் சொன்னார். “உங்க தாத்தா சொன்னது உண்மை தான். அது மட்டுமில்லை. நான் போன ஜென்மத்தில் பிராமணனா பொறந்ததா, ஒரு ஜோசியக்காரன் சொன்னான்”.



தலையில் அடித்துக்கொண்டேன். பெரியார் எதை எல்லாம் எதிர்த்து வந்தாரோ, அதையெல்லாம் என் மாமா மனமுவந்து ஏற்றுகொண்டிருக்கிறார்.


பெரியாரின் தி.க.விலிருந்து அண்ணா பிரிந்து வந்தபோது, கிட்டத்தட்ட கடவுள் மறுப்புக்கொள்கையை கைவிட்டு, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற புதிய கொள்கை முழக்கத்தை அறிவித்தார். முதலில் கடவுளை மறுப்பதும், பிறகு கடவுளை ஏற்றுக்கொள்வதுமாக வாழ்ந்த, வாழ்கின்ற நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் ஏற்படாத அதிர்ச்சி, பெரியார்தாசன் என்று தன் பெயரை அறிவித்துக்கொண்ட சேஷாசலம், இன்று தன் பெயரை ‘அப்துல்லாஹ்’ என்று மாற்றிக்கொண்டு,இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருகிறார் என்பதும், இனி அவர் கடவுளின் புகழைப் பரப்பப்போவதாக அறிவித்திருப்பதும்தான். அப்துல்லாஹ் எந்த அளவிற்கு, கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்துவந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், திடீரென்று அவருக்கு அவர் நம்பும் இறைவன் தன் இருப்பை எந்த நிகழ்வின் மூலம் அவருக்கு உணர்த்தியிருப்பான் என்று தெரியவில்லை.

பெரும்பாலும், வயதாக ஆக, மரணத்தின் வாசலில் இருக்கும் பலருக்கு மறு ஜென்மம் பற்றிய பயம் வரலாம். அப்படி மறுஜென்மம் என்று ஒன்று இருக்கும்பட்சத்தில், கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தால் என்னவாகும் என்ற பயம் வந்து, கடவுளை பலர் நம்ப ஆரம்பிப்பார்கள். அப்படி ஏதாவது ஒன்று அப்துல்லாஹ்வுக்கு நிகழ்ந்ததா தெரியவில்லை.

எது எப்படி இருப்பினும், கடவுளை நம்ப ஆரம்பித்துவிட்ட, முன்னாள் பெரியார்தாசனை, நாம் வாழ்த்தி வைப்போம்.

நிற்க, தற்சமயம் நான் தீவிர கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்து வருகிறேன். ஒருவேளை நான் எதிர்காலத்தில் கடவுளை தீவிரமாக நம்ப ஆரம்பித்துவிட்டால், நான் எதனால் அப்படி மாறிப்போனேன் என்பதை அறிய நானே ஆவலாக இருக்கிறேன்.


கொசுறு: மாயாவதிக்கு ஆயிரம் ரூபாய் பணமாலை சாத்திய பகுஜன் சமாஜ் கட்சியினர், எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு அஞ்சாமல், இனிமேல் தங்களின் தலைவிக்கு பணமாலை மட்டுமே சூட்டுவோம் என்று தில்லாக அறிவித்திருக்கிறார்கள். சபாஷ்.

ஒருத்தன் மலம் கழித்துக்கொண்டே, ஏதோ தின்று கொண்டிருந்தானாம். அந்தவழியே சென்றவன் கேட்டானாம், “ஏண்டா, பேண்டுகிட்டே திங்கறே”. அதற்கு மலம் கழிப்பவன் சொன்னானாம். “நான் தொட்டுகிட்டும் தின்பேன். வேலையைப் பாத்துக்கிட்டுப் போடா”...



12 கருத்துகள்:

  1. ---"ஒருத்தன் மலம் கழித்துக்கொண்டே, ஏதோ தின்று கொண்டிருந்தானாம். அந்தவழியே சென்றவன் கேட்டானாம், “ஏண்டா, பேண்டுகிட்டே, திங்கறே”. அதற்கு மலம் கழிப்பவன் சொன்னானாம். “நான் தொட்டுகிட்டும் தின்பேன். வேலையைப் பாத்துக்கிட்டுப் போடா”... "---

    Good..... It fits to Nithyanadha also.

    Regards
    Barani

    பதிலளிநீக்கு
  2. மாயாவதி விசயத்தில் நடப்பது, காங்கிரஸ் அரசின் ஊடாக மோசடி.

    உண்மையான தலித்து தொண்டர்கள், மக்கள் மாயாவதி மேல் அன்பு வைத்து உள்ளனர். அந்த அன்பின் அடையாளமாய் மாலையும் பரிசும் அளிக்கின்றனர்.

    மாயாவதி தான் இந்தியாவில் உள்ள உருப்படியான தலித்து தலைவர். அவர் உண்மையிலேயே தலித்துக்களை முன்னேற்றி உள்ளார்.
    தமிழ்நாட்டு தலித்து தலைவர்கள் போல் இல்லாமல் உண்மையிலேயே தலித்துக்கள் மேல் அக்கறை கொண்ட தலைவர் மாயாவதி.

    காங்கிரசிற்கும் மற்ற கட்சிகளுக்கும் பயம் வந்து விட்டது,

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கு நன்றி ராம்ஜி அவர்களே!

    மாயாவதி மேல் எனக்கும் பெரும் மதிப்பு இருந்தது உண்மை. ஆனால், 500 கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தில், உ.பி.யில் பல இடங்களில் தனக்குத்தானே சிலை வைத்துக்கொண்டதும், பணமாலை விஷயத்தில் மௌனம் சாதிப்பதும், அவர் நம் ஊர் கலைஞர் மாதிரி புகழ் போதையில் இருக்கிறாரோ என்று எண்ண வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி பரணி அவர்களே!

    இது கிராமத்தில் சொல்லப்படும் கதை. நித்யானந்தர் விஷயத்தில் கூட இது பொருந்துகிறதுதான்.

    பதிலளிநீக்கு
  5. சகோதரரே, நீங்கள் ஒரு தடவை குர்ஆனை நடுநிலையாக படியுங்கள்,அதன் அற்புதத்தை விளங்கலாம் (இறைவன் நாடினால்).

    பதிலளிநீக்கு
  6. அன்புடன் சகோதரருக்கு, உங்கள் கருத்துக்கு நன்றி. நிற்க, இந்து மதத்திலிருக்கும் கடவுள் மறுப்புகொண்டவர்கள் இஸ்லாத்தை குறை சொல்லமாட்டார்கள். ஏனெனில், இஸ்லாம் கடவுள் என்பவர் உருவமற்றவர் என்று சொல்கிறது. இஸ்லாம், சாமியார்களை ஆதரிப்பதில்லை. விதவை மறுமணங்களை புரட்சி என்று சொல்வதில்லை. நான் இந்து என்று அழைக்கப்படுகின்ற காரணத்தினாலே, அது சிலரால் தவறாக வழி நடத்தப்படுகிறது என்பதாலே தான் கடவுளை மறுக்கிறேன். மேலும், பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவியதை நான் குறையாகப்பார்க்கவில்லை. அதிசயப்படுகிறேன். அவர் எப்படி இவ்வாறு மாறினாரென்று. கண்டிப்பாக நான் குர்-ஆனைப் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  7. "பேல்றவன் தொட்டுகிட்டு தின்னா பரவால ஆனால் கேட்டவன் முஞ்சியலே தடவுறான். அவன செருப்பால அடிக்குனும்" உங்க பதிவு நல்லா இருக்கு வாழ்த்துகள். பெரியார்தாசன் பற்றி ஒரு பதிவு நான் போட்டு இருக்கேன் பாருங்கள். ஓஷோ புத்தகம் வாங்கி படியுங்கள் மரணம் என்றால் என்ன கடவுள் என்றால் என்ன என்று நன்றாக புரிந்துகொள்ள முடியும். http://rkguru.blogspot.com/

    நட்புடன்: Rk.Guru

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி குரு அவர்களே! உங்க இணையத்தளம் அருமையா இருக்குது. குறிப்பா ஓஷோ பற்றிய கட்டுரைகள் அருமை. கண்டிப்பாக ஓஷோவைப் படிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. பெரியார்தாசனின் மத்மாற்றம் என்னையும் அதிர்ச்சிக்க்ள்
    ஆழ்த்தியது,, ஒருவேளை வயோதிகமும்,மரணப்யமும்
    ஒரு நாத்திகனையும் ஆத்திகனாக்கிவிடுமோ என்னவோ,,அவர் சொல்வதுபோல் முஸ்லிம் மதத்திலும் குறைகள் இல்லாமல் இல்லையே,,பெண்னடிமைத்னம்,மதத்தீவிரவாதம்,,குறுகியவட்டம்,, என்று நிறைய இருக்கிறது,,ஆனால் மற்ற
    மத்ங்களைவிட குறைகள் குறைவு என்று வேண்டுமானால் திருப்திபட்டுக்கொள்ளலாம்,,
    என்றாலும் அவருளிருந்த அந்த மனித நேயம் மறையாமல் இருந்தால் சரி

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கு நன்றி moulefrite அவர்களே! ஆமாம், உங்களின் பெயர் மௌலியா?

    பதிலளிநீக்கு
  11. அண்ணே.......

    மாயவதிக்கு போட்ட மாதிரி அவங்களுக்குக்கு ரூபாய் நோட்டுல மாலை போடலுனுதானே இந்த அரசியல்வாதிங்களோட பீலீங்.........

    இதே அவனவன் கட்சிக்காரன் ரூபாய் நோட்டுல மாலை போட்டா இவனுக வாங்காமய இருக்க போராணுக....

    அந்தம்மா தைரியமானவங்கனு அவக்க மேல ரொம்பவே மரியாதை ஆனா அட்ந்தம்மா ரொம்பவே பிலிம் காட்டுது.........

    என்னா ஸ்டைலா கையாட்டுச்சுனு பாத்தீகளா???????

    பதிலளிநீக்கு
  12. டேய் தம்பீ சூர்யா, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... அதோட அந்தம்மா முகத்துல தெரியுது பார் ஒரு பெருமிதம், அடடா, ஏதோ இந்தம்மாவே அதை உழைச்சு சம்பாதிச்ச மாதிரி.

    பி.கு: பெல் தல செத்துட்டாருன்னு, புரளியை கெளப்பிவிட்ட நாயி யாருடா?

    பதிலளிநீக்கு