மிஷ்கினின் “நந்தலாலா” படத்தை சிலாகித்து இடுகை போட்ட சாநிக்கு, மிஷ்கின் காட்டியிருக்கும் நன்றி தான், யுத்தம் செய் படத்தில் நீது சந்திராவுடன் சாநி போட்டுக்கொண்டிருக்கும் குத்தாட்டம். நடக்கட்டும். இலக்கியவெறி தலைக்கு ஏறி, உ.த.எ. வையும், மன்னிப்புக்கேட்க வைத்த ஸ்டார் டிவி நீயா,நானா டைரக்டர் ஆண்டனியையும் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் சாநிக்கு இது ஒரு உடனடி நிவாரணமாக இருக்ககூடும்.
நிற்க, சாநி பரிந்துரை செய்து கொண்டிருக்கும் “அறிவுப்புத்திரன்” என்னும் இணையத்தளத்தைக் காணவில்லை. உடற்பயிற்சியிலும், அடிதடியிலும் ஆர்வம் கொண்ட ஸ்டீபன் ராஜ், ஏன் இந்த தளத்தை நீக்கிவிட்டார் என்று தெரியவில்லை. சாநியால் உத்தம தமிழ் எழுத்தாளர் -2 (உ.த.எ.1 - சுந்தர ராமசாமி) என்று அழைக்கப்படும் ஜெயமோகன் பற்றியும், அவர் குடும்பம், மகன் பற்றியும் ஸ்டீபன் எழுதியிருந்த விதம் கொஞ்சம் கூட ரசிக்கமுடியவில்லை. தனிமனித வக்கிரத் தாக்குதலின் உச்சம்.
புளிப்பெடுத்துப்போன இந்துத்துவா, கடவுள் விஷயத்தில் இரட்டை நிலை (Agnostic), காந்தியின் புகழ் பாடுதல் தவிர ஜெயமோகன் ஒரு சிறப்பான எழுத்தாளர் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.பிரச்சார நெடியில் நீட்டி முழக்கி எழுதப்படும் அவரின் கட்டுரைகளை, மம்மி படத்தில் வில்லன் வாயிலிருந்து கிளம்பும் குளவிகளுக்கு ஒப்பிட்டு சாநி எழுதியதை நான் ரசித்தேன். உண்மையில், ஜெயமோகனின் புனைவுகளுக்கு முன் சாநியின் புனைவுகள் மண்டியிடவேண்டும். சரோஜாதேவி கதைப் புத்தகங்களுக்கு இணையாக சாநி தன் எழுத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள், படிக்கச்சகிக்கதக்கதல்ல.
சாநியின் எழுத்தில் சுவாரஸ்யம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்,அவற்றில் இலக்கிய இன்பம் கிட்டுவதில்லை. தான் அணியும் ஜட்டிகள் குறித்தும், ஷூக்கள் குறித்தும் இவர் எழுதும் கட்டுரைகள் எந்த விதத்தில் இலக்கியத்தில் சேர்த்தி என்பதை ஸ்டீபன் தான் சொல்லவேண்டும்.
முன்பொருமுறை, ஒரு பதிவர் சாநி தன் மகளை வன்புணர்ச்சி செய்ய முயன்றார் என்று எழுதியதைப் படித்துவிட்டு ஆங்காரமாய் ஆடிய சாநி, இன்று ஸ்டீபன் ஜெயமோகனின் மகன் பைத்தியக்காரன் என்றும், ஜெமோ தன் மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறவர் என்றும் எழுதியிருப்பதை எப்படி நியாயப்படுத்துகிறார். ஆக, ஜெயமோகன் பற்றி சாநி மனதில் நிலவும் வன்மத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
ஒருவேளை இந்தமாதிரி இணையத்தளங்களை தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், நித்யானந்தன் விஷயத்தில் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை மக்கள் மறக்கும் வண்ணம் திசைதிருப்ப முயல்கிறாரோ என்று தோன்றுகிறது.
இப்படி நான் சொல்வதன் மூலம் நான் ஜெமோவுக்கு சொம்பு தூக்குவதாக யாராவது சொன்னால், சந்தோஷம். நர்சிம்-சந்தனமுல்லை விவகாரத்தில் எல்லோரும் தலையிட்டு ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களைச் சொல்லி பஞ்சாயத்து செய்தார்கள். அறிவுப்புத்திரன் - சாநியின் இழிசெயலை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை இரண்டு எழுத்தாளர்களும் பேசித்தீர்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்களோ? இல்லை, எழுத்தாளர்களிடையே சண்டையும், சச்சரவும் சகஜம் என்று விட்டுவிட்டார்களோ?
இதையெல்லாவற்றையும் விட, ஜெமோ இதையெல்லாம் கண்டுகொள்ளாலும், பதிலுக்கு வன்மம் நிறைந்தக் கட்டுரைகள் எழுதாமலும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பாவம் சாநி, இனிமேல் சினிமாவில் பிசியாகிவிடுவார். அதனால் அடிக்கடி இணையத்தில் எழுதமுடியாமல் போகலாம். அப்போது, அவரின் போலீஸ் ரசிகர் அவரை லாக்கப்பில் தள்ளி கையில் லேப்-டாப் கொடுத்து எழுதச்சொல்லுவார். அப்போது சாநி என்ன செய்வார்?
ஹி.. ..ஹி.... நிற்க, சாநியின் குத்தாட்டம் காண நான் ஆவலுடனிருக்கிறேன்.
சாநி அவர்கள் சிவப்பு டி சர்ட் அணிந்து பெர்முடாஸ் உடன் நமீதாவுடன் குத்தாட்டம் ஆடுவதாக மிஷ்கின் எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் , அதுபோல் ஒரு கற்பனை காட்சியினை மனதிற்குள் ஓட்டி பாருங்கள் ஆஹா என்ன ஒரு சுகம் பாருங்கள், என்ன நமீதா சம்மதிக்க வேண்டும்
பதிலளிநீக்குதுர்வாசர்-தம்மம்பட்டி
@ராகவேந்திரன்.
பதிலளிநீக்குஅய்யா, நீங்கள் வேறு. இனிமேல் சிவப்பு டீ சர்ட் அணியக்கூடாது என்று சாநியின் வாசகியர் சிலர் அவருக்கு அன்புக்கட்டளையிட்டிருக்கிறார்கள். ஆகவே, பச்சை டீ சர்ட் சரியா வருமா?