பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, தமிழில் துணைப் பாடமாக இருந்த 'சிறுகதை தொகுப்புகள்' என் பொறுமையை அளவில்லாமல் சோதித்து வந்தன. குறிப்பாக, புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' மற்றும் ஜெயகாந்தனின் 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' போன்ற சிறுகதைகள் என்னுள் பெரும் திகைப்பை ஏற்படுத்தின. பாடப் புத்தகங்களில் அச்சிடப்படும் அளவுக்கு அவற்றில் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை என்று நினைத்திருக்கிறேன்.
என்னுடைய இந்த மனப்பதிவு, என் இருபத்து எழாம் வயது வரை, ஆழமாக உறைந்து போனது. குமுதம், ஆனந்த விகடன், வாரந்தரி ராணி, தேவி போன்ற இதழ்களில் வரும் சிறுகதைகளை விடாமல் படிப்பேன். சில கதைகளின் கடைசி வரியை படிக்கும்போது, என்
