புதன், ஏப்ரல் 14, 2010

பார்ப்பனீயமும், கர்நாடக ஸங்கீதமும்

“கர்நாடக இசையையும், பரத நாட்டியத்தையும் பிராமணர்கள் தத்தெடுத்துக்கொண்டதைப்போல், சினிமாத்துறையையும் யாராவது தத்தெடுக்க முன்வரவேண்டும்” என்று ஏதோ ஒரு பேட்டியிலோ அல்லது மேடையிலோ ’உலக நாயகன்’ திருவாய்மலர்ந்தருளியிருந்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------

Tamijarassane - இந்த வார்த்தையை நீங்கள் தமிழரசன் என்று உச்சரித்தால், உங்களுக்கு ஃப்ரெஞ்ச் மொழி நன்றாகத் தெரியுமென்று அர்த்தம்.

1997 ஆம் ஆண்டு நான் வேலை தேடி பூனா வந்தபோது,திகி கிராமத்தில் என் மச்சான் சந்திரசேகர் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது அவர் CBI -ல் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருந்தார். அவருக்கென்று ஒரு தனி பங்களா கொடுத்திருந்தார்கள். இரவு நேரத்தில் அலுவலகத்திலிருந்து அவர் வீடு திரும்ப நேரமானால், அந்த பேய் பங்களாவில் தனியாக இருக்க பயப்படுவேன்.

இப்படிப்பட்ட ஒரு நன்னாளில் என் மச்சான் தமிழரசனை எனக்கு அறிமுகப்படுத்தினார். சுருள்சுருளான தலைமுடியும், நெற்றியில் விபூதியும், அழகான புன்சிரிப்புடன் தன்னை என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார் தமிழரசன். பாண்டிச்சேரிக்காரர். அவர் வி.எஸ்.என்.எல்-லில் ட்ரெய்னீ எஞ்சினியராக கல்லூரி கேம்பஸ் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு பூனாவில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவருக்கும் ஒரு அழகான பங்களா ஒன்றை தங்குவதற்காக வி.எஸ்.என்.எல்.கொடுத்திருந்தது. என் மச்சானின் வீடும், தமிழரசனின் வீடும் குறைந்த தொலைவிலிருந்தன.தமிழரசனுக்கு இரவு நேர ஷிஃப்ட் ஒர்க் இல்லையென்றால், பெரும்பாலும் அவருடைய வீட்டிற்கு சென்று விடுவேன். அப்போது அவர் எனக்கு ஜோதிடம் பார்ப்பதைக் கற்றுக்கொடுத்தார். எனக்கு அதில் நம்பிக்கை இல்லையென்றாலும், அவர் ஆர்வத்துடன் சொல்லித்தரும்போது கேட்டுக்கொள்வேன்.

திடீரென ஒருநாள் தமிழரசனை இரவு நேரத்தில் சந்திக்கமுடியவில்லை. ”இன்றைக்கு வரலாமா” என்று நான் தொலைபேசியில் கேட்டேன்.”சாரி சார். நான் இப்போ கர்நாடக இசை கத்துக்கிட்டிருக்கேன். விஸ்ராந்தவாடியில் ஒரு கேரளாக்கார பிராமிண் மாமிகிட்ட டெய்லி கத்துக்கிறேன். அதனால வீட்டுக்கு வர ராத்திரி லேட்டாகும்” என்றார்.பின்பொருநாள் நான் பகலில் அவருக்கு ஃபோன் செய்துவிட்டு, அவரின் வீட்டிற்கு சென்றபோது, வீட்டினுள்ளிருந்து தமிழரசன் உரக்கப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். ஒரு போர்வையை தரையில் விரித்து, அதன் மேல் சம்மணமிட்டு அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார் தமிழரசன். அருகில் கருப்பாக ஏதோ பேட்டரி போல் இருந்தது. அதிலிருந்து ‘கொய்ங்க்’ என்ற சத்தம் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்தது.

காலிங் பெல்லை அழுத்தினேன். “கதவு தொறந்து தான் இருக்கு. உள்ளே வாங்க சார்”. உள்ளே சென்று அவர் எதிரே அமர்ந்தேன். தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். பாடி முடித்ததும் என்னைப்பார்த்து, கண்ணைச் சிமிட்டினார். “சார், பாட்டு எப்படி இருந்தது?”. எனக்கும், கர்நாடக இசைக்கும் துளியும் சம்மந்தமில்லை.இருந்தாலும், லேசாக தலையசைத்து, சூப்பர் என்று சொன்னேன். மனிதர் உற்சாகமாகிவிட்டார். இப்போ நான் பாடினது மாயமாளவகௌள என்ற ராகம். எல்லா டீச்சர்ஸும் இதைத்தான் முதல் ராகமாக சொல்லிக்கொடுப்பார்கள். ‘அலைகள் ஒய்வதில்லை’ படத்துல கூட கமலா காமேஷ், ராதாவுக்கு இதைத் தான் முதல் ராகமா சொல்லிக்கொடுப்பாங்க”. எனக்கு போரடித்தது. ”அது என்னங்க, கருப்பா, சத்தமெல்லாம் கொடுக்குது?” என்றேன். இதுக்குப் பேருதான் சார் சுருதிப்பெட்டி. எந்தக்கட்டையிலப் பாடணுமோ அதுல வச்சி பாடலாம். பாருங்க, இந்த பட்டனை, இப்படித் திருப்பினா அது ஒரு கட்டை.. ஆக்சுவலா எட்டு கட்டைன்னு எதுவும் கிடையாது. கழுதைக் கத்தல்தான் எட்டுக் கட்டைன்னு சொல்லுவாங்க”.

இதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேய் பங்களாவில் தனியாக இருந்தாலும் சரி. இனிமேல், தமிழரசன் வீட்டிற்கு வருவதில்லை என்று சத்தியம் செய்துகொண்டேன். என்றாலும், தொலைபேசி மூலமாக அவர் என் மீது படையெடுத்துக்கொண்டிருந்தார். “சார், நேத்து எங்க மேடம், சாருகேசி ராகத்தோட ஆரோகணம், அவரோகணம் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. லவ்லி ராகா சார். வாத்தியார் வீட்டுப் பிள்ளைப் படத்துல வருமே, “மணமாலையும், மஞ்சளும் சூடி” அதுகூட சாருகேசி தான். அப்புறம், ஸ்ரீ ராகவேந்திராவுல வர்ற “ஆடல் கலையே தேவன் தந்தது”,மன்மத லீலையை வென்றார் உண்டோ, வசந்த முல்லை போலே வந்து”.. சினிமாவுல சாருகேசி சாங்க்ஸ் எல்லாம் ஹிட் சார்”. எனக்கு தலை சுற்றியது. அதன் பிறகு போன் அலறினால், நானும் அலறிவிடுவேன்.

அதே வி.எஸ்.என்.எல்-லில் வெங்கட கிருஷ்ணன் தலைமை கணக்காளராக இருந்தார். அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. அவர் ஒரு பிராமிண். ஒரு முறை நவராத்திரி விழா அன்று வெங்கட கிருஷ்ணன் வீட்டில் கொலு வைத்திருந்தார்கள். அன்றைக்கு அவர் வீட்டிற்கு நிறைய பிராமிண் தம்பதியினர் வந்திருந்தார்கள். வந்தவர்கள், யாராவது பாட்டு பாடினால் நன்றாக இருக்குமென்று அபிப்ராயப்பட்டார்கள். வெங்கடகிருஷ்ணனின் மனைவி, ”தமிழரசன் நல்லாப் பாடுவாரே, அவரைக்கூப்பிடுறேன்” என்றார். சற்று நேரத்தில் தமிழரசன் தன் சுருதி பெட்டி சகிதம் வந்துவிட்டார்.

மாமிகளெல்லாம் வாயெல்லாம் பல்லாக அவரிடம் கர்நாடக இசைப் பாடல் பாடத்தெரியுமா என்று விசாரித்தார்கள். உற்சாக மிகுதியில். தமிழரசன் தனக்குத் தெரிந்த ராகங்களை எல்லாம் சொல்ல, மாமிகள் புல்லரித்துப் போனார்கள்.கடைசியாக அவர் ரேவதி ராகத்தில் ஒரு பாடல் பாடுவதாக முடிவாயிற்று. கணீரென, அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பிப் பாட ஆரம்பித்தார் தமிழரசன். மாமிகளிடம் இந்தப் பாடலுக்கு ஆதிதாளம் என்று க்ளூ வேறு கொடுத்தார்.

“போ, சம்போ, சிவ சம்போ, ஸ்வயம்போ....”

மாமிகள் அந்தப்பாடலை ரசித்துக்கொண்டே தொடை தட்டினார்கள். தமிழரசன் பாடி முடிந்ததும், மாமிகள் கரகோஷம் எழுப்பி அவரைப் பாராட்டினார்கள். ஒரு மாமி அவரிடம் கேட்டார். “நோக்கு கல்யாணம் ஆச்சா, அம்பி?”. தமிழரசன் இல்லையென்று தலையாட்டினார். ”எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கா, சேப்பா இருப்பா, நன்னா பாடுவா. நோக்கு என்ன கோத்திரம்டா அம்பி?”. சட்டென்று தமிழரசன் முகம் இருண்டது. தலையை குனிந்து கொண்டார்.

 “இல்லை. நான் வேற ஜாதி”.

“என்ன வேற ஜாதியா? அப்போ நீ நம்மவா இல்லையா? சரி, நீ என்ன ஜாதி?”

இப்போது தமிழரசன் கண்கள் கலங்கிவிட்டன. தலையை குனிந்துகொண்டே சொன்னார். “நான் வள்ளுவர்-ங்கிற ஜாதி.”

“எது? ஜோசியம் சொல்லுவாளே அந்த ஜாதியா? அது எஸ்.ஸி தானே?”


தமிழரசன் அழுகை அதிகமானது. சட்டென்று எழுந்து தன் சுருதிப்பெட்டியுடன் வெளியேறினார். மாமிகள் எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.ஒரு மாமி, வெங்கட கிருஷணனின் மனைவியிடம் கேட்டார். “ஏண்டிம்மா, பாட்டு பாட நோக்கு வேற ஆள் கிடைக்கலையா? அதற்கு அவர் சொன்னார், “ சாரி மாமி, அவர் இந்த ஜாதின்னு எனக்குத் தெரியாது”. எனக்கு அங்கே இருப்பது அருவருப்பாகப்பட்டது. வெங்கட கிருஷணனின் மனைவி என்னிடம் கூட நான் என்ன ஜாதியென்று கேட்டிருக்கிறார். நான் என் ஜாதியை சொன்னபோது, “அப்போ நீங்க ப்ராமிண் இல்லையா? உங்க மச்சானைப்பார்த்தா ப்ராமிண் மாதிரி இருக்கிறார். நீங்க பொய் சொல்லலையே”...

அதற்குப் பின் நான் வெங்கட கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றதில்லை.

கொசுறு : என்னுடன் பணிபுரியும் ஜாகீத் மீர் ஒரு காஷ்மீரி. பெண்களுடன் இணையத்தில் அரட்டை அடிப்பது அவனின் பொழுதுபோக்கு. ஒருமுறை அவன், யு.எஸ். ஸில் சாஃப்ட்வேரில் பணி புரியும் ஒரு ப்ராமிண் பெண்ணிடம் இப்படி கேட்டிருக்கிறான்.

“நீங்க இவ்வளவு படிச்சிருக்கீங்களே..இன்னும் மனுஷன்ல ஏற்றத்தாழ்வு இருக்கிறதை ஆதரிக்கிறீங்களா?”

”அதிலென்ன சந்தேகம். ப்ராமின்ஸ் தான் எப்பவுமே இண்டெலெக்சுவலஸ். மற்றவங்களை விட உயர்வானவங்க”...

அதற்குப்பின் அவனுடைய அரட்டைத் தொடர்பிலிருந்து அந்த மாமியை அவன் நீக்கிவிட்டான்.

பார்ப்பனீயம் என்பது ஒரு கீழ்மையான குணம்.(நன்றி : டாக்டர் ருத்ரன்)



9 கருத்துகள்:

  1. வெங்கடாசலம்,

    பிறப்பால் நானும் ஒரு பார்ப்பனன் என்பதை (சற்றே வருத்ததுடன்) தெரிவித்துக் கொண்டு துவங்குகிறேன்.

    எனக்கு சற்றே விவரம் புரிய துவங்கிய கால்கட்டத்தில், நான் செய்த முதல் விஷயம் என் பூனூலை அவித்து போட்டதுதான்! அத்துனை அருவருப்பாக இருந்தது (இடைஞ்சலாகவும்) அது எனக்கு - நான் தமிழன் என்பதை உணர!

    ஆரியம்-திராவிடம் என்பதே குழப்பத்தில் உள்ளது, இதுதான் உண்மை - துவக்கத்தில் பாரதநாடு முழுமையும் இருந்தவர்கள் தமிழர்களே, பின் எங்கிருந்து இந்த ஆரியம், பார்ப்பனீயம் எல்லாம் வந்து தொலைத்தனவோ, தெரியவில்லை!

    இசை, நாட்டியம், புலமை, அறிவியல், வானியல் - என வடமொழி தனக்கு “திருடி”க் கொண்ட அனைத்தும் தமிழனுடையதே... இதை சொன்னால் ஒத்துக்கொள்வார்களா, சான்றுகளை அழித்தவர்கள்!

    ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே மெய், அது நிலைக்கட்டும்...

    பகிர்விற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. ஹாய் விஜய். நான் சொல்ல வந்த கருத்தை, தவறாக எடுத்துக்கொள்ளாமல்-கோபப்படாமல் நீங்கள் புரிந்துகொண்டதற்கு என் நன்றிகள். நீங்கள் பார்ப்பனராகப் பிறந்ததற்கு வருத்தப்பட அவசியமில்லை. பிற மனிதனையும் நீங்கள் சமமாக பாவிக்கும் மனப்பான்மை இருந்தால் போதும். நிற்க, உங்களின் நேர்மை எனக்குப்பிடித்திருக்கிறது. தங்களின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு
  4. அன்புசால் பெத்துவிற்கு, நீர்த்து போன ஒரு விஷயத்திற்கு இந்த பாழாய் போன ருத்ரன் தான் ஒரு மாத காலமாக கிளப்புகிறார் என்றார் நீங்களுமா, எந்த காலத்தில் இருக்கிறீர்கள். இன்னுமா அப்படி பார்க்கிறார்கள். எங்கள் உறவினர்கள் பாதிபேர் இப்போது கலப்பு திருமணம் புரிந்துள்ளார்கள். தற்போதைய பிரச்சினை என்ன தெரியுமா BC vs SC தான் தினமும் நமது கிராமங்களில் யாராவது எஸ்.சி பெண்ணையோ அல்லது பையனையோ இழுத்துச் சென்றால் உடன் புகார், அல்லது வெட்டுதல் குத்துதல் கொஞ்சமாவது தற்போதைய டிரெண்ட் பற்றி பேசுங்கள் அய்யா
    நட்புடன்,ராகவேந்திரன்,தம்மம்பட்டி

    பதிலளிநீக்கு
  5. @ ராகவேந்திரன்
    பி.சி. மற்றும் எஸ்.சி மக்களை வர்ணாசிரமத்தின் பேரில் காலம், காலமாய் பிரித்து வைத்திருந்தது யார் அய்யா? வேறூன்றிப்போய்விட்ட இந்த பிரிவினையை களையத்தான் நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. brahmins are superior since we born from the head of lord

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா! மண்டையில் பிறந்தவர்களா நீங்கள்! ஆனால், மருத்துவம் வேறேதோ சொல்கிறதே!

      நீக்கு