வெள்ளி, பிப்ரவரி 19, 2010

பங்காரு (அடிகளார் இல்லை)

                 நண்பர் செந்திலுக்கு “பங்காரு” என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. தெரிந்த நண்பர்கள் தயவு செய்து பின்னூட்டமிடலாம்.

                                         (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

நிற்க, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் “பங்காரு அடிகளார்” அவர்களுக்கும், செந்தில்குமாருக்கும் எந்த சம்மந்தமும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

தனக்கான பஞ்ச் டயலாக்கை, தானே எழுதிக்கொண்ட அமெரிக்காவாழ் இளையதளபதி விஜய் இவர் (The freeky fellow from Madras). பின்னே, மற்ற நண்பர்களுக்கு இவர் எழுதியிருக்கு பஞ்ச் டயலாக், கொலைவெறியோடு எழுதப்பட்டது போலிருக்கும். அடுத்தடுத்த அத்தியாயங்களில் நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்.

ஆறு விரல் அதிர்ஷ்டக்காரர். சினிமா நடிகை,நயன்தாராவுக்கும் கையில் 6 ஆறு விரல் என்று படித்திருக்கிறேன்(ரொம்ப முக்கியம்).

மேல் படிப்புக்காக - எல்லோரும் கிராமத்திலிருந்து சென்னை செல்வது வழக்கம். இந்த கிளிஷேவை மாற்றி, சென்னையிலிருந்து புத்தனாம்பட்டி வந்து எம்.சி.ஏ. படித்த பின்நவீனத்துவ கலகக்காரர் இவர். எங்கள் வகுப்பில், ஆங்கிலத்தில் (சென்னை பாஷையிலும்) வெளுத்துக்கட்டிய சைதைப் புயல்.

1995ஆவது வருடம் என்று நினைக்கிறேன். ஒருமுறை நண்பர் எல்.எஸ். செந்தில்குமாரும், நானும் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய, சென்னை சென்றபோது - செந்திலின் சைதாப்பேட்டை, தாட்ஹண்டர் காலனி வீட்டில் தான் தங்கினோம்.அன்று பயங்கர மழை பெய்து கொண்டிருந்தது.அவரின் அம்மா சமைத்து எங்களுக்குப் பறிமாறிய அந்த சூடான, சுவையான உணவு இன்னமும் என் நினைவிலிருக்கிறது. அன்று சாயங்காலம், எங்களை ஒரு டீக்கடைக்கு அழைத்து சென்று சூடாக பஜ்ஜி வாங்கித்தந்தார் செந்தில். அமெரிக்கா சென்று, செட்டில் ஆன பிறகும் செந்தில் அந்த பஜ்ஜியை மறக்கவில்லை போலும். ஒருமுறை, செந்திலின் கில்லி எஃப்.எம்.மில்(http://www.gillyfm.com/), பாடல்களை அவர் தொகுத்து வழங்கிய ஒலிக்கோவையைக் கேட்டேன். அதில் செந்தில் இவ்வாறு சொல்லியிருந்தார்.

“ஒரு நல்ல மழை காலத்துல, சூடா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டா, ஆஹா, எவ்வளவு சூப்பரா இருக்கும்”.....

ம்...பழசை மறக்காத மனுஷன். என்ன செய்ய மச்சி? பஜ்ஜி சாப்பிட ஆசை வந்தா, சைதை வந்துட்டுப்போங்க...

கில்லி எஃப்.எம்.மில் செந்திலின் குரல் கேட்டபோது, ஒரு சிறந்த ரேடியோ ஜாக்கியை, தமிழகம் இழந்துவிட்டதை உணரமுடிந்தது. செந்தில் தன் மகள் ஸ்வாதியுடன் நடத்திய உரையாடல் கவித...கவித...(பெண்பிள்ளைகள் பெற்ற என் மாதிரி ஆட்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்).

நாளை,  ஆட்டோகிராஃபில் இடம் பெற இருப்பவர் “சாமியார்” என்ற பட்டப்பெயருடன் அழைப்படும் சரவணன் ஜீ அவர்கள்.

4 கருத்துகள்:

  1. நன்றாக உள்ளது.. மேலும் எழுதுங்கள் .. நான் கில்லி எப் எம் இல் பகிரிந்து கொள்கிறான்..

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி செந்தில். நம்முடன் படித்த எல்லோரையும் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். என் இணையதளத்தைப்பற்றி நண்பர்களுக்கும் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  3. ஹாய் காந்தி. வருகைக்கு நன்றி. http://software.nhm.in/products/writer - இந்த லிங்கை அழுத்தி, என்.எச்.எம். ரைட்டரை இறக்கி தமிழில் டைப் செய்யுங்கள்

    பதிலளிநீக்கு